வள்ளலார் அருள்மாளிகையில் தைப்பூச ஜோதி தரிசன விழா
விழுப்புரம்-ஜன,20
விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகையில் தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெற்றது.
விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகையில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில். 81-வது ஆண்டு தைப்பூச நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்ந்து சுத்த சன்மார்க்க கருத்தரங்கமும் மாலையில் ஜோதி வழிபாடு வள்ளலார் வரலாறு வில்லுப்பாட்டு திருவருட்பா இசை முழக்கம் சிறப்பு சொற்பொழிவு சன்மார்க்க மாணவ மாணவிகளின் யோகாசனம் பரதநாட்டியம் மற்றும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது இந்த ஜோதி தரிசனத்தை விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் முக கவசம் அணிந்தபடி கலந்துகொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர் இதன் பின்னர் மாலையில் சிறப்பு சொற்பொழிவு திருவருட்பா மெல்லிசை நிகழ்ச்சி திருவருட்பா கீர்த்தனை பரதநாட்டியம் நடைபெற்றது விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை வள்ளலார் அருள் மாளிகை சன்மார்க்க சங்க நிர்வாகிகளான ஜெய அண்ணாமலை பலராமன் ராமலிங்கம் சரவணபவன் பாரதி அழகானந்தம் உள்ளிட்ட பலர் ஏற்பாடு செய்திருந்தனர்

