நாகூர் கந்தூரி சந்தனக்கூடு விழாவிற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல்.
வேதாரண்யம் ஜன 10
கொரோனா கட்டுப்பாட்டு விதி மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசாணையின் படி, வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பொதுமக்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
நாகூர் ஆண்டவரின் 465-ம் ஆண்டு சந்தனக் கூடு மகோற்சவமானது வரும் 13 மற்றும் 14.01.2022 ஆகிய இரண்டு நாட்கள் தர்கா நிர்வாகிகளை கொண்டு மட்டுமே நடைபெறவுள்ளது. மேலும் பொதுமக்கள் அனுமதிக்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் யாரும் சந்தனக்கூடு நிகழ்விற்கு வருகை புரிய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

