வேதாரண்யம்
ஜன 10 நாகப்பட்டிணம்மாவட்டம் வேதாரண்யம் காவல் சரகம் கோடியக்கரை மீனவ கிராமத்தில் 10.01.2022 ஆம் தேதி காலை 11.15 மணி முதல் 12.30 மணி வரை மீனவர் நல உரிமை சங்க கட்டிடத்தில் கோடியக்கரை மீனவ பஞ்சாயத்தின் சார்பாக திரு.சீனிவாசன் என்பவர் தலைமையிலும்ஆறுகாட்டுத் துறைமீனவர்கள் பஞ்சாயத்தார் சார்பாக திரு.முருகையன் என்பவர் தலைமையிலும் சமரச பேச்சுவார்த்தை மீனவர் நல உரிமை சங்கம் கோடியக்கரை கட்டிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது பேச்சுவார்தையில் 1. கோடியக்கரையில் பாரம்பரியமாக மீன்பிடி தொழில் செய்து வரும் வெளி மாவட்ட மீனவர்கள் தங்கி மீன்பிடிப்பதற்கு ஆறு காட்டுத்துறை மீனவர்கள் எந்த இடையூறும் செய்வதில்லை எனவும், 2) கோடியக்கரையில் மீன்பிடி தொழில் செய்யும் ஆறு காட்டுத்துறை மீனவர்கள் வழக்கம் போல் பாரம்பரிய முறையில் தொழில் செய்ய கோடியக்கரை மீனவ பஞ்சாபாத்தார்கள் எந்த தடையும் செய்வதில்லை எனவும் வாய்மொழியாக பேசி முடிவு செய்துள்ளனர் இதில் 35 நபர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

