கொரோனா பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால், பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக சுற்றுலா பயணிகளை நம்பியே வாழ்வாதாரம் தேடி வந்த கொடைக்கானல் மக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சீசன் நேரங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டது காரணமாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வராததால் கொடைக்கானல் மக்கள் வாழ்வாதாரம் இழந்து காணப்படுகிறார்கள் கொடைக்கானல் மக்கள் கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் மக்களுக்கு உணவு பொருள்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிஸ்கட் போன்றவைகளை அவர்களின் தேவையை அறிந்து அவர்களுக்கு அந்தந்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று கோடை கிரீன் பீஸ் சாரிடபிள் டிரஸ்ட் அமைப்பின் மூலம் அதன் நிர்வாக இயக்குனர் சக்திவேல் அவர்கள் ஏற்பாட்டில் டிரஸ்ட் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று உணவு பொருள்களை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
உங்களிடம் இருக்கின்ற இரண்டு கைகளில் ஒன்றை உங்களுக்காகவும், மற்றொன்றை பிறருக்காகவும் உதவி செய்யுங்கள். முடிந்த அளவுக்கு ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்து வாருங்கள் என்ற தாரக மந்திரத்தோடு கொரோனா தொற்று முதல் அலையும்போது கொடைக்கானல் பகுதி மக்களுக்கு இந்த அமைப்பு மூலம் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



கோடை கிரீன் பீஸ் சாரிடபிள் டிரஸ்ட் (அவசரகால மக்கள் உதவி குழு)
சார்பாக கொடைக்கானல் உள்ள பல்வேறு பகுதியில் வசிக்கும் சுமார் 100 குடும்பங்களுக்கான நேற்று ஒரு நாள் மட்டும்
காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள்
குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் ஆகியவற்றை அந்தந்தப் பகுதிகளில் ஏழை எளிய மக்களின் தேவைகளை அறிந்து டிரஸ்ட் நிர்வாகிகள் மூலம் தெரிந்து உடனடியாக அவர்களுக்கு உதவும் வகையில்
டிரஸ்டின் இயக்குனர் வழக்கறிஞர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் அஜ்மல் உள்ளிட்டவர்கள் செய்து வரும் உதவிகளையும் அவர்களின் இந்த மனிதநேயத்தை சமூகவலைத்தளங்களில் பலர் பாராட்டி வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது நிவாரண உதவிகளை அவர்களின் இல்லங்களுக்கு சென்று வழங்கிவரும் டிரஸ்ட் நிர்வாகிகள் அனைவருக்கும் கொடைக்கானல் மக்கள் மனதார வாழ்த்தி வருகிறார்கள்.
செய்தி தொகுப்பு: கொடைக்கானல் வி ஆனந்த்

