தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூபாய் 9 லட்சம் மதிப்புள்ள 1455 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை சரக்கு வாகனத்தில் கடத்தியவர் கைது – எதிரியை கைது செய்த கழுகுமலை காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.*
*கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்துவதாக கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சோபா ஜென்சி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் திருமதி. சோபா ஜென்சி தலைமையில் தலைமை காவலர் திரு. சுப்புராஜ் மற்றும் காவலர் திரு. பால் தினகரன் ஆகியோர் இன்று (04.06.2021) அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்ட போது கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு கழுகுமலை காளியம்மன் கோவில் அருகில் தார்ப்பாய் மூடப்பட்டு சந்தேகத்திற்கிடமாக நின்று கண்டிருந்த Eicher சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 36 மூடைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.*
*மேற்படி போலீசார் வாகனத்தின் ஓட்டுநரான சேலம் காடம்பட்டி, மாமரத்ததூரைச் சேர்ந்த முருகன் மகன் சீனிவாசன் (36) மற்றும் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மூலக்காடைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் மாது (37) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பெங்களூரிலிருந்து வருவதும் கழுகுமலை யைச் சேர்ந்த அய்யாதுரை மகன் சந்திரசேகர் என்பவரிடம் புகையிலை பொருட்களை ஒப்படைக்க சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.*
*இதுகுறித்து கழுகுமலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசன் மற்றும் மாது ஆகிய இருவரையும் கைது செய்து, ரூபாய் 9,00,000/- மதிப்புள்ள 1455 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*

*மேற்படி எதிரிகளை கைது செய்து, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த கழுகுமலை காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார். மேலும் தலைமறைவாக உள்ள சந்திரசேகர் என்பவரை கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.*
*இந்த ஆண்டு இதுவரை 684 அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வழக்குகள் பதிவு செய்து 687 குற்றவாளிகள் கைது செய்து 3800 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோன்று 88 கஞ்சா வழக்குகள் போடப்பட்டு 305 பேர் கைது செய்யப்பட்டு 47 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுவரை 75 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 8 பேர் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள்*
எனவே இதுபோன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா போன்றவற்றை விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.*
*இதில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கலைக் கதிரவன், கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சோபா ஜென்சி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.*

