தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் விபரங்களை இணையதளம் வாயிலாக பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் வழிமுறைகளை பின்பற்றி கரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது தளர்வற்ற ஊரடங்கு அமலில் இருப்பதால் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வெளியே வருவதைத் தடுக்கும் பொருட்டு காய்கறிகள், மளிகைப்பொருட்கள், பழங்கள், மீன்கள், இறைச்சி போன்ற அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் பணியில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 250 டன் விற்பனையாகி வருகிறது.
மேற்படி பணிக்காக நாளது தேதி வரை 512 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் விபரங்களை தூத்துக்குடி மாநகராட்சி இணையதளம் www.thoothukudicorporation.com வாயிலாக பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். தூத்துக்குடி மாநகராட்சியில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை மற்றும் வாட்ஸ் அப் செயலி வாயிலாக வரப்பெற்ற பொது சுகாதாரம் மற்றும் கரோனா தொடர்பான 411 புகார்களில் 393 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்று அறிகுறிகள் தொடர்பான சந்தேகங்கள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடர்பான புகார்கள் , நிர்ணயம் செய்த விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்கும் வியாபாரிகள் மற்றும் மாநகராட்சி அனுமதி இன்றி விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சியின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை எண் 0461-2326901-ஐ தொடர்பு கொள்ளலாம் அல்லது வாட்ஸ் அப் புகார் எண் 7397731065-ல் பதிவு செய்யலாம்.
தூத்து மாநகராட்சி பகுதிகளில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம் குறித்த விபரம் மற்றும் அன்றைய தினம் தடுப்பூசி போடப்பட்ட விபரங்களை Facebook,Twitter,Instagram போன்ற சமுக வளைதளங்களில் நாள்தோறும் பொதுமக்கள் வசதிக்காக பதிவேற்றம் செய்யப்படுகிறது. கரோனா நோய் தொற்று ஏற்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்கள் தங்களது சந்தேகங்கள், மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசனைகளுக்கு தூத்துக்குடி மாநகராட்சி கரோனா கண்ட்ரோல் ரூம் அலைபேசி / தொலைபேசி எண்கள் 0461-4227202, 6383755245 ஆகிவற்றில் தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

