தேவகோட்டை நகராட்சி சார்பில் இரண்டாம் தவனையாக கொரோன தடுப்பூசி சிறப்பு முகாம்.இன்று ஒரே நாளில் 480 பேர் தடுப்பூசி செலுத்தினர்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி பொறுப்பு ஆணையாளர் மதுசூதனன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் செல்வகுமார் இவர்கள் தலைமையில் ஒத்தக்கடை
கோட்டையம்மன் கோவில் அருகில் இரண்டாம் தவனையாக கொரோன தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் நகரமைப்பு ஆய்வாளர் சுரேஷ் வருவாய் ஆய்வாளர் சுரேஷ்குமார், சுகாதாரதுறை ஆய்வாளர் ராஜாமணி,நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், மற்றும் ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஷியாம் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டனர் இந்த தடுப்பூசி முகாமில் 45 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கோவிட் ஷில்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு கொண்டனர். இன்று ஒரே நாளில் 480 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்
தேவகோட்டை கண்ணன்

