தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வைத்து விளாத்திகுளம் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட எட்டயபுரம் மற்றும் மாசார்பட்டி காவல் நிலையம் சார்பாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் என 100 பேருக்கு ஊடரங்கை முன்னிட்டு நிவாரணப் பொருட்களான அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று வழங்கினார்.*
இதற்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் தலைமையில் எட்டயபுரம் மற்றும் மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் செய்திருந்தனர்.*
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ், எட்டயபுரம் காவல் ஆய்வாளர் திரு. ஜின்னா பீர் முகமது உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.*

