கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1.500 கிராம் எடை கொண்ட கஞ்சாவை 278 சிறிய பாக்கெட்டுகளாக போட்டு விற்பனை செய்து கொண்டிருந்த இருவர் கைது – கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்.
கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கலைக்கதிரவன் அவர்கள் உத்தரவின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. தங்கராஜ் தலைமையில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. ஸ்டீபன் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்ற போது கோவில்பட்டி காமராஜர் தெருவைச் சேர்ந்த தங்கப்பசாமி மகன் தங்கராஜ் (24) மற்றும் கோவில்பட்டி நேரு தெருவைச் சேர்ந்த முனியசெல்வம் மகன் முனியசாமி என்ற கார்த்திக் (20) ஆகிய இருவரும் கோவில்பட்டி தங்கப்பநாடார் நந்தவனம் செல்லும் குறிஞ்சான்குளம் கண்மாய் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் அவர்களை கைது செய்து, சோதனை செய்ததில் 8 கிராம் எடை கொண்ட 153 கஞ்சா பாக்கெட்டுகளும், 2 கிராம் எடை கொண்ட 125 கஞ்சா பாக்கெட்டுகளும், பாக்கெட்டுகளை சீல் வைக்கக்கூடிய மெஷின் மற்றும் எடை மெஷினும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்தனர். மேற்படி மொத்த கஞ்சாவின் எடை சுமார் 1.500 கிலோ கிராம் ஆகும்.
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


