தென்காசி மாவட்டம்,மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஐ.பி.எஸ் உத்தரவின் பேரில் மாவட்டமெங்கும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 11 நபர்களை ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 233 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.



