தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக நுழைவாயிலில் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள விழிப்புணர்வு தொலைக்காட்சியை (Digital Bign Board) இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
தமிழக அரசு வழங்கியுள்ள சுமார் 2 லட்சம் மதிப்புள்ள விழிப்புணர்வு பெரிய திரையுடன் கூடிய தொலைக்காட்சி (Digital Bign Board) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக நுழை வாயிலில் நிறுவபட்டுள்ளது. இந்த தொலைக்காட்சி மூலம் கொரோனா விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள், சைபர் குற்றங்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள், பேரிடர் காலத்தில் மக்கள் செய்யவேண்டியவைகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து பொதுமக்களுக்கு பயன்தரக்கூடிய விழிப்புணர்வு செய்திகளை குறும்படம், புகைப்படங்கள், மீம்ஸ், வாசகங்கள் மற்றும் படங்கள் மூலமாக மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மேற்படி விழிப்புணர்வு தொலைக்காட்சியை (Digital Bign Board) மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் உடனிருந்தார்.


