தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களை வென்று சாதனை படைத்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தனிபெரும்பான்மையுடன் தி.மு.க. ஆட்சி அமைத்தது இதையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திமுகவுடன் பிரதான கூட்டணிக் கட்சியாக விளங்கிய காங்கிரஸ் தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஊர்வசி அமிர்தராஜ் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களே அறிவாலயத்தில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து திமுக காங்கிரஸ் கூட்டணிக் கட்சியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்ற ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் வாழ்த்து பெற்றார். என்பது குறிப்பிடத்தக்கது
