திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் மரிiயாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ஊர்வசி அமிர்தராஜ் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இன்று (04.05.2021) திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போர்த்தினார்.
பின்னர் கனிமொழி எம்பியிடம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஊர்வசி அமிர்தராஜ் வாழ்த்துப்பெற்றார்.
