திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுடன் இணைந்து கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நெல்லை மாநகர காவல் துணை கமிஷ்னர் ஸ்ரீனிவாசன் தலைமையில், சட்டக் கல்லூரி முதல்வர் லதா சட்டக்கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு பதாகைகளுடன், நெல்லை சட்டக் கல்லூரி முன்பு பொதுமக்களுக்கு முக கவசம் கட்டாயமாக அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல்,மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து 04-05-2021 ம் தேதியன்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

