தேனி ,ஜூன்,16.
தமிழ் திரை உலகின் இயக்குனர் இமயம்
பாரதிராஜா கிராமங்கள் வாழ்வியலை உலகம் முழுவதும் பிரதிபலிக்கச் செய்த பெருமை பெற்றவர் தமிழ் திரை உலகில் மாபெரும் இயக்குனர் தான் பாரதிராஜா இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கொண்டு இருக்கும் பொழுது
தன் மகள் ஜனனியிடம், தான் இறந்தால், தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான தேனியில் உள்ள பண்ணை வீட்டில் தன்னுடைய உடலைப் புதைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் பாரதிராஜா. அவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக இயக்குனர் பாரதிராஜா மறைந்த உடன் தனது சொந்த ஊரான தேனியில் பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அவருடைய சொந்த மாவட்டமான தேனியை அடுத்து காட் ரோட்டில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில்
முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது இதில் . முக்கிய பிரமுகர்கள் பலரும் பாரதிராஜா நினைவிடத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினர்

அதுபோல் தேனி மாவட்டம் காட்டு ரோடு பகுதியில் உள்ள அவரது கல்லறையில் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் அதன் மாநில தலைவர் முனைவர் பொன் பாலசுப்பிரமணியன் தலைமையில், மாநில அமைப்பு செயலாளர் டாக்டர் கே எஸ் செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஆர்கேடி வெங்கடசுப்பிரமணியன், பழனி ஒன்றிய செயலாளர் பிரபாகரன், ஒன்றிய பொருளாளர் முருகேசன், ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.. பின்னர் அவரது இல்லத்தில் உள்ள புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கலை உலகின் நிரப்பப்படாத ஒரு இடத்தை நிரப்ப முடியாத இடத்தை தன் திறமையால் உலக தமிழர்கள் எல்லாம் தன்னுடைய மறைவால் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி சென்ற இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறோம்..என
மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் மாநில தலைவர் முனைவர் பொன் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது
மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
