தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வைத்து திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தமிழக முதல்வர் சிங்கப்பெண் அதிரடிப்படையை தொடங்கியுள்ளார். திமுக ஆட்சியில் பிங்க் பீட்டா என்று தொடங்கப்பட்டதை தற்போது பெயர் மாற்றம் செய்துள்ளார். பாலியல் புகார் குறித்து ஸ்ரீவைகுண்டம் தவெகவை சேர்ந்த பெண் தனக்கு நீதி கேட்டு போராடி வருகிறார். இது முதல்வர் விஜய் காதுக்கு கேட்கவில்லை. சிங்கப்பெண் நிகழ்வு என்பது ஓர் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி போன்று நடந்தது. இதற்கு ப்ரமோஷன் செய்தார்கள். தேர்தலில் பொய் செய்திகள் எப்படி எடுத்துச் சென்றார்களோ, அதே போன்று பிரமோஷன் செய்கின்றனர். பொய் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் 850 சிசிடிவி கேமராக்கள் திமுக ஆட்சியில் அமைத்து விட்டோம். ஆனால் ஆட்சிக்கு வந்த மறுநாளே சிசிடிவி கேமரா வைத்து விட்டதாக சமூக வலைதளங்களில் பொய் தகவல் பரவுகிறது. திமுக ஆட்சியில் குளிர்சாதனம் செய்யப்பட்ட பஸ் நிலையம் தொடங்கப்பட்டது ஆனால் தவெக ஆட்சிக்கு வந்த மறுதினமே நாங்கள் ஏசி பஸ் ஸ்டாப் திறந்து விட்டோம் என்று சமூக வலைதளங்கள் மூலமாக பொய்யாக தகவல் பரவுகிறது. சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை உண்மையா என்று மக்கள் ஆராய வேண்டும். உண்மை தன்மை புரிந்து கொள்ள வேண்டும். இது மக்களுக்கு என்னுடைய வேண்டுகோள். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பிற்கு ஆளும் கட்சி தான் பொறுப்பு. சென்னையில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தவெகவை சேர்ந்த பெண்ணுக்கு நடந்த பாலியல் பலாத்காரம் இதில் ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறீர்கள். ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பெண் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் பெயரை சொல்லி புகார் சொல்கிறார். ஆனால் அவரிடம் விசாரணை செய்ய தயங்குகின்றனர். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரிடமும் விசாரணை செய்ய வேண்டும். தளபதி ஸ்டாலின் ஆட்சியில் தான் பெண்கள் துணிந்து புகார் கொடுக்க வந்தனர் ஆனால் இன்று தவெக ஆட்சியில் பாதிக்ப்பட்ட பெண்ணுக்கு நடந்த பாலியல் சம்பவத்திற்கு குரல் கொடுக்க மறுக்கின்றனர். தவெகவினரின் அட்ராசிட்டி அதிகம். கடை கடைக்கு மாமுல் அதிகம் கேட்கின்றனர். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் கூட நாங்கள் தான் இருப்போம் என்று பள்ளி முதல்வரை மிரட்டுகின்றனர். டாஸ்மார்க் கடையில் கூட போய் மிரட்டுகின்றனர். காணாததை கண்டவன் என்ற கிராமத்தின் பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் பெயரைக் கூறி பாலியலில் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்துள்ளார் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். உங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கே உங்களால் நீதி கொடுக்க முடியவில்லை நீங்கள் எப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு நீதி கொடுப்பீர்கள். நம்முடைய முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி மக்கள் விரோத செயல் அனைத்திற்கும் குரல் கொடுப்பவராக, மக்களுக்கு நீதி வாங்கி தரும் எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம். சென்னையில் மின்சார தட்டுப்பாட்டிற்கு நிர்வாக சீர்கேடு தான் காரணம். தமிழ்நாடு அரசு இதனை சரி செய்திட வேண்டும். இந்த ஆட்சியில் ரீல்ஸ் என்பது மிக முக்கியம். ஆய்வுக்கு சென்றாலும் செல்போன் ரிலீஸ் எடுக்க வேண்டும் ஒரு பட்டன் மைக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது. ரீல்சை செட் பண்ணி பொய்யான செய்தியை மக்களிடம் கொண்டு செல்கின்றனர் ஸ்கூல் பேக்கு கொடுக்கிறதுக்கே பெரிய பில்டப் கொடுக்குறாங்க. குறைகளை சுட்டிக்காட்டும் மூன்று தொலைக்காட்சிகளை முடக்கியுள்ளனர் இது என்ன நியாயம் தொலைக்காட்சிகளை மிரட்டி உருட்டி அடக்கி விடலாம் என்று நினைக்கிறேன் பத்திரிக்கை ஜனநாயகம் என்பது ஜனநாயக நாட்டுக்கு மிக முக்கியமானது இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் இதை ஒடுக்குவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் ஆதவ் அர்ஜுனா சொல்வது எல்லாமே பொய் உரைதான் அவர் உண்மைக்கு புறம்பாக சவுடால் பேச்சு எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தமிழகம் முழுவதும் லாட்டரி விற்பனைக்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் தமிழக மக்கள் இருக்கின்றனர். ஏனென்றால் லாட்டரி நடத்தும் நிர்வாகம் தான் தமிழ்நாட்டில் பெரிய பொறுப்பில் இருக்கிறது என்றார்
மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிா்மல்ராஜ், மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமாா், பழனி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் அபிராமிநாதன், கவிதாதேவி, துணை அமைப்பாளர் பிரபு, மாநகர அணி அமைப்பாளா்கள் ஜீவன்ஜேக்கப், ஜெயக்கனி, துணை அமைப்பாளா் ரவி, கவுன்சிலா் விஜயகுமாா், பகுதி அணி அமைப்பாளர் சூா்யா. பெருமாள்கோவில் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி அல்பட், உள்பட பலர் உடனிருந்தனா்.
