இந்தியாவில் இரண்டாம் அலை கொரனோ வைரஸ் பரவலை தொடர்ந்து இந்தியாவில் 7 மாநிலங்கள் அதிகரித்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி சார்பில் கொரோணா பரவலை தடுக்கும் விதமாக மாஸ்க் அணிய வேண்டும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி தேவகோட்டை ஆனையாளர் பொறுப்பு மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர் ஜெகநாதன் தலைமையில் துணை கண்காணிப்பாளர் சபாபதி முன்னிலையில் மாவட்ட உணவு திட்ட பாதுகாப்பு அலுவலகர் Dr.பிரபாவதி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நகராட்சி பணியாளர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி NCC நாட்டு நல பணியாளர்கள் அணிவகுத்து முக கவசம் அணிய வேண்டும் ,அடிக்கடி கை கழுக வேண்டும் ,சமூக இடைவெளி கடை பிடிக்க வேண்டும் என பதாதைகள் எந்தி தேவகோட்டை நகராட்சி அலுவலகத்திலிருந்து பேருந்து நிலையம், தியாகிகள்பூங்கா, காய்கறி வணிக வளாகம் பகுதிகளில் சென்று பேரணியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்


