மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்பட்டு வந்ததால் இதற்கு தீர்வு காணும் வகையில் பொன்மேனி பேருந்து நிறுத்தம் அருகே இருபுறமும் வாகனங்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் திரும்புவதற்கு ஏதுவாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்த போக்குவரத்து மாற்றம் அப் பகுதியில் செல்லும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி ஆய்வு செய்தார்.


