================
தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் சங்கிலி அவர்களின் தலைமையே கொண்டு சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியை மேலும் வலு சேர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், கிளை,ஒன்றியம் மாநகரம், மாவட்டம் மண்டலம் மாநிலம் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்தவர்கள், மற்றும் பல்வேறு அமைப்புகளில் செயல்பட்டு வந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களை தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியில் அதன் நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் சங்கிலி அவர்கள் முன்னிலையில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலாளர், மாநில பொருளாளர் ஆர்.கே.ஆனந்தன், M.மருதுஜிதேவர் மாவட்ட பொதுச் செயலாளர் மதுரை புறநகர் எம்எம்பாரத் தேனி மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்ஆர்ரவிக்குமார்ஜி திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் பிசேதுராமன் மாநில இளைஞரணி செயலாளர் கூடல்குணா அவர்கள் மாநில மாணவரணி செயலாளர் உசிலைவிக்கி தேனி மாவட்ட தலைவர் ராஜ்குமார் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் தர்மர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் உசிலை செல்வன் வீரபாண்டியன் மாநில மாணவரணி செயலாளர் வதிலை ஸ்டாலின் உசிலை ஒன்றிய செயலாளர் எஸ்தெய்வம் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கோடை ஆனந்த் தேனி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் நவீன் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த இணைப்பு விழாவில் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் கரூர் மாவட்ட பொதுச்செயலாளராக கே காமேஸ்வரன் நியமிக்கப்பட்டார் கரூர் மாநகர் மாவட்ட செயலாளராக எம் ராஜ்குமார் நியமிக்கப்பட்டார் . புதிதாக கட்சியில் இணைந்த அனைவருக்கும் தமிழ் தேசிய ஃபார்வர்டு பிளாக் கட்சி சின்னம் பொறித்த சால்வையை போத்தி அனைவரையும் நிறுவனத் தலைவர் சங்கிலி வரவேற்றார்.

