=================
தூத்துக்குடி,
ஏப்ரல் 19
தூத்துக்குடியில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 12 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 12-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாடெங்கும் அஞ்சலி செலுத்தப்படுகிறது
அதன்படி தூத்துக்குடியில் தினத்தந்தி அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 12-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகே உள்ள வ உ சி மார்க்கெட் காமராஜர் சிலை முன்பு அலங்கரிக்கப்பட்ட சிவந்தி ஆதித்தனார் திருவுருவப்படத்திற்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் கலந்துகொண்டு ஆதித்தனார் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

