===============
தூத்துக்குடி,
ஏப்ரல், 19.
பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 12-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாடெங்கும்அஞ்சலி செலுத்தப்படுகிறது
அதன்படி தூத்துக்குடியில் பத்மஸ்ரீ தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 12-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகே உள்ள வ உ சி மார்க்கெட் காமராஜர் சிலை முன்பு அலங்கரிக்கப்பட்ட சிவந்தி ஆதித்தனார் திருவுருவப்படத்திற்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் நாடார் தலைமையில்
நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் மில்லை தேவராஜ், மாநில பொருளாளர்
எம்எஸ்டி. ரவி சேகர்,
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சாமுவேல் ராஜ், மாவட்டத் தலைவர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் செல்வகுமார்
மாநிலச் செயலாளர் சண்முகவேல், மாநில துணைத்தலைவர் எம் கணேசன், மாநில
ஒருங்கிணைப்பாளர் மில்லை ஸ்டீபன்,
கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கணேசன்,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் முனியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் சக்தி நாராயணன் , மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவா, அழகுதுரை, கோல்டன் ஸ்டீல் குமார், கிறிஸ்டோபர், கார்த்திக், நட்டாத்தி ஒன்றியம் குமார், மற்றும் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்க அமைப்பின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அனைவரும்
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் கல்வி, பத்திரிகை, விளையாட்டு, ஆன்மிகம் மற்றும் சமூக சேவைகளைப் போற்றும் வகையில் அனைவரும் முதலில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செய்து வீரவணக்கம் செலுத்தினர்..

