================—–
தூத்துக்குடி, ஏப்ரல், 5
திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்” – அறிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் நன்றி தெரிவித்தார்.
திருச்சியில் 290 கோடி ரூபாய் செலவில் மாபெரும் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த திருச்சி நூலகத்திற்கு
கல்விக் கண்களைத் திறந்து, தமிழ்நாட்டின் கல்விப் புரட்சிக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திட்ட பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதி,
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், மதுரையில் கட்டப்பட்ட நூலகத்திற்கு `கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ என்று பெயர் வைக்கப்பட்டது. இதையடுத்து கோவை, திருச்சியில் அடுத்தடுத்து நூலகங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அவ்வகையில், தற்போது திருச்சியில் 290 கோடி ரூபாய் செலவில் மாபெரும் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த திருச்சி நூலகத்திற்கு பெயர் சூட்டப்படுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசும்போது
“கோவையில் தந்தை பெரியார், சென்னையில் பேரறிஞர் அண்ணா, மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர்களின் பெயர்களைத் தாங்கி நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளதோ, அதனைத் தொடர்ந்து, திருச்சியில் அமையவிருக்கும் நூலகத்திற்குப் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன். என்ன தெரிவித்த முதல்வர்
தமிழ்நாட்டில் கிராமங்கள்தோறும் பள்ளிகளைத் தொடங்கி, மதிய உணவு அளித்து, இலட்சக்கணக்கான குடும்பங்களின் கல்விக் கண்களைத் திறந்து, தமிழ்நாட்டின் கல்விப் புரட்சிக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திட்ட பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதி,
திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் வெளியிட வேண்டுமென்று முதலமைச்சர் என்ற முறையில் நான் கேட்டுக் கொள்கிறேன்.” என்று சட்டசபையில் தெரிவித்தார்.
திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததால் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு அமைப்புகள் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் சட்டசபையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி மக்களின் சார்பில் முதல்வருக்கு நன்றி என தெரிவித்தார். இது போல் பல்வேறு அமைப்புகளும் முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நிறுவனத் தலைவர்
எஸ்பி மாரியப்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வி.இ ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச் செயலாளர் மில்லை தேவராஜ், மாநில பொருளாளர்
எம்எஸ்டி. ரவி சேகர்,
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சாமுவேல் ராஜ், மாவட்டத் தலைவர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் செல்வகுமார்
மாநிலச் செயலாளர் சண்முகவேல், மாநில துணைத்தலைவர் எம் கணேசன், மாநில
ஒருங்கிணைப்பாளர் கல்வி நிறுவன சேர்மன் மில்லை ஸ்டீபன், ஆகியோர்,
முன்னிலை வகித்தனர்
இந்த கூட்டத்தில்
திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்” – அறிவித்த
தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில்
கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கணேசன், வடக்கு மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் முனியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் சக்தி நாராயணன் , மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவா, அழகுதுரை, மற்றும் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்க அமைப்பின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

