வக்பு வாரிய திருத்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே மத்திய அரசின் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஏப்.4-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்து இருந்தது.
அதன்படி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று த.வெ.க. போராட்டம் நடத்தப் பட்டது.
இந்நிலையில் த.வெ.க. போராட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே காலை 10 மணிக்கு வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியில் அஜிதா ஆக்னல் தலைமையில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 150 மேற்பட்ட பெண்கள் இளைஞர்கள் உட்பட சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் கௌதம் மற்றும் தவெக வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



அதனைத் தொடர்ந்து தொழிலதிபர் எஸ் டி ஆர் சாமுவேல் ராஜ் ஏற்பாட்டில் அதே இடத்தில் வைத்து முன்னாள் மாமன்ற உறுப்பினர் கோல்டன், கிஷோர், அண்டோ, சுபாகர் உள்ளிட்ட த.வெ.க வினர் மதியம் 12 மணியளவில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து மதியம் ஒரு மணி அளவில் 3 நபராக வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்து
தூத்துக்குடியில்
த வெ க. சார்பில் மீண்டும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் தொழிலதிபர் லயன் JKR ஜெ. முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் ராம்ஸ் அன்பரசன் உள்ளிட்ட
தவெக.வினர் திரளாக பங்கேற்றனர். தூத்துக்குடி மாநகர் பகுதியில் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தவெக சார்பில் மூன்று குழுக்களாக ஒரே இடத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது. இதனால் தூத்துக்குடி பொதுமக்களும் காவல்துறையும் சற்று குழப்பத்தில் காணப்பட்டன.
தவெக சார்பில் ஒரே பிரச்சனையை முன் நிறுத்தி 3 குழுக்களாக ஏன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். என்று தூத்துக்குடி மாநகர முழுவதும் டீக்கடை பெஞ்சாக பேசப்பட்டு வருகிறது.. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், பொதுச் செயலாளர் புரூஸ்லீ ஆனந்த் தூத்துக்குடி நிர்வாகிகளை ஒரே அணியாக செயல்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டிருந்தால்
தமிழக வெற்றிக்கழக ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் தமிழக அளவில் திராவிட கட்சிகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் நிலை ஏற்பட்டு இருக்கும் என பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் தொண்டர்கள் பேசி வருகிறார்கள்..
மூன்று அணிகளாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாஸ் காட்டியது யார் என்ற ரிப்போர்ட் தற்போது தமிழக வெற்றிக் கழகம் தலைமை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் செய்தியாளர்களிடம் தமிழக வெற்றி கழகம் சார்பில் வேறு எந்த ஒரு அணியாவது திடீரென ஆர்ப்பாட்டம் நடத்த வருகிறார்களா?? என்று கேட்டு தெரிந்த பின்னர் கூட்டத்தை விட்டு கலைந்து சென்றனர் தமிழக வெற்றிக்கழக ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது..

