பத்திரிகையாளர்
நல வாரியத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
“பத்திரிகையாளர் நல வாரியத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தி பத்திரிகையாளர்கள் நலன் காக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் பத்திரிகையாளர்களுக்கு அங்கீகார அட்டை வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தினர் செய்தி சேகரிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட டோல்கேட்டில் இலவசமாக அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 40 ஆண்டுகள் கடந்தும் பத்திரிகை யாளர்களுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு கட்டங்களாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது
எனவே, எவ்வித பாரபட்சமுமின்றி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடியில் உள்ள பத்திரிகையாளர் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரளாக பத்திரிகையாளர்கள் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிக்கையாளர்கள் உரிமையை மீட்டெடுக்கும் வகையில் பல்வேறு கோஷங்களும் எழுப்பப்பட்டது.
இந்த மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு
டியூஜே மாநகர் மாவட்ட தலைவர் சக்தி முருகன் தலைமை தாங்கினார்.

புறநகர் மாவட்ட தலைவர் இருதய ஞான ரமேஷ் முன்னிலை வகித்தார். மூத்த பத்திரிகையாளர் அருண், டி.யூ.ஜே., தேசிய குழு உறுப்பினர்கள் அலெக்ஸ் புரூட்டோ, காயல் அகம்மது சாகிப், திருச்செந்தூர் கிருஷ்ணன், ஐயப்பன், தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற செயலாளர் மோகன்ராஜ், பத்திரிக்கை மீடியா கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ், தமிழக பத்திரிகையாளர் சங்க தலைவர் அலெக்ஸாண்டர், தமிழன்டா இயக்கத் தலைவர் பத்திரிகையாளர் உலகாள்வோன் என்ற ஜெகஜீவன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மூத்த பத்திரிகையாளர்கள் ஆத்திமுத்து, கண்ணன், தூத்துக்குடி மாநகர மாவட்ட துணைத் தலைவர் சண்முக ஆனந்த், பொருளாளர் ஞானதுரை, செய்தி தொடர்பாளர் பொன் பலவேச ராஜ், தீக்கதிர் குமார், பாலகிருஷ்ணன், ராஜேந்திர பூபதி, ராமசந்திரன், மூத்த பத்திரிக்கையாளர் குமாரவேலு, கோவில்பட்டி மீனாட்சி சுந்தரம், ஸ்ரீவைகுண்டம் ஞானதுரை, புறநகர் மாவட்ட பொருளாளர் சாந்தகுமார், பத்திரிகையாளர் மன்ற பொருளாளர் ராஜ், பிரஸ் கிளப் உறுப்பினர் நடராஜன்,உட்பட அனைத்து பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

