சென்னை
மாநில நெசவாளர் அணி ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மார்ச் 1ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடவும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் மீண்டும் திராவிட மாடல் அரசு அமைய அணி நிர்வாகிகள் அனைவரும் அயராது பாடுபட்டு மீண்டும் கழக ஆட்சி அமைந்திட அயராது உழைத்து மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்திடவும், ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை ஒட்டுமொத்தமாக புறகணிப்பு செய்வதை கடுமையாக கண்டித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், மாநில துணைச்செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற ெதாகுதி பொறுப்பாளருமான வசந்தம் ஜெயக்குமாா், உள்பட பல நிா்வாகிகள் கலந்து கொண்டனர்.

