============= அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா 77 வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து
அதிமுக வர்த்தக அணி சார்பில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான
சி.த.செல்லப்பாண்டியன் தூத்துக்குடியில்
ஜெ. பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாகவும் , ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில்
பல்வேறு நலத்திட்ட உதவிகளை அள்ளி வழங்கும் வகையில் மாநகரமே விழாக்கோலம் காணும் வகையில் நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என கடந்த வாரமே முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி
முன்னேற்பாடு பணிகளை செய்து சிறப்பித்தார் சி.த. செல்லப்பாண்டியன்
அதன்படி கடந்த 23ஆம் தேதி தூத்துக்குடி எஸ்.எஸ்.
மாணிக்கபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு தெற்கு மாவட்ட வர்த்தக அணிசெயலாளர் துரைசிங் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் பொன்ராஜ் முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ்குமார், முன்னாள் துணைத்தலைவர் ரத்தினம், முன்னாள் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின்பாண்டியன், முன்னாள் மீனவரணி செயலாளர் அகஸ்டின், வட்டச்செயலாளர்கள் ஜெனோபர், சந்திரசேகர், வட்டப்பிரதிநிதி ராஜ், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச்செயலாளர் ஞான்ராஜ், மீனவரணி தலைவர் டெலஸ்பர், முன்னாள்கவுன்சிலர் சகாயராஜ், முன்னாள் மீனவரணி இணைச்செயலாளர் ஜோசப், மாவட்ட பிரதிநிதி ஜேடியம்மாள், சிறுபான்மை அணி செயலாளர் அசன், போக்குவரத்து பிரிவு டெரன்ஸ், முன்னாள் வட்டச்செயலாளர் ஸ்டாலின், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம், வரவேற்புரையாற்றினார்.
மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் ஆயிரம் பேருக்கு அரிசி வேஷ்டி சேலை, அலுமினிய டவேரா,
5 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் ஆகியவற்றை வழங்கி பேசுகையில் அதிமுகவை தொடங்கி எம்.ஜி.ஆர் எல்லோருக்கும நன்மை கிடைக்கும் வகையில் தமிழகத்தில் நல்லாட்சி நடத்தினார். அவரது மறைவிற்கு பிறகு அவரால் அடையாளம் காட்டப்பட்ட ஜெயலலிதா பொதுச் செயலாளராக பணியாற்றி அவர் வழியிலேயே முதலமைச்சராக இருந்த காலம் வரை மக்கள் நலன்கருதி பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு புத்தகங்கள் மடிக்கணினி சைக்கிள் பெண்கள் திருமணத்திற்கு தாலிக்குதங்கம், பணம் மிக்ஸி, மின்விசிறி, போன்ற பல்வேறு நல்லத்திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்கள் நலன் கருதி வாழ்ந்தார். மீனவ மக்கள் எம்ஜிஆர் மீதும் அதிமுக மீதும் பற்றுள்ளவர்கள் ஜெ மறைவிற்கு பின் நான்கரை ஆண்டுகாலம் ஜெயலலிதா வழியில் மக்கள் ஆட்சி நடத்தினார் எடப்பாடியார் தற்போது தமிழகத்தில் தேவையற்ற செயல்களும் சம்பவங்களும் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இதை காவல் துறையினர் கட்டுப்படுத்த வேண்டும். நமது மாவட்டத்தை பொறுத்தவரையில் எஸ்பி ஏஎஸ்பி இருவரும் நல்லவர்கள் தான் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் சில விஷயங்களுக்கு துணைசெல்கின்றனர். அதனால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. ஓவ்வொரு தாய் தந்தையரும் தங்களது குழந்தைகளை கவனமாக பார்த்துகொள்ள வேண்டும் திசை மாறிவிட்டால் வாழக்கை சீரழிந்துவிடும். பொறுமை அடக்கம் விட்டுக்கொடுத்தல் போன்றவைகள் இல்லாத நிலை இருப்பதை கண்டு மன வேதனையடைகிறேன். எதிர் வரும் 2026ல் தேர்தல் நமக்கு முக்கியம் அனைவரும் ஓற்றுமையாக பணியாற்றி எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க உழைக்க வேண்டும். என்று பேசினார்.
பின்னர் இரவு 12 மணியளவில் பழைய பேருந்து நிலையம் அருகில் வட்டச்செயலாளர் மில்லை ராஜா ஏற்பாட்டில் பட்டாசு வெடித்து கேக் வெட்டி இனிப்புகளை சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்;. 24/02/24 நேற்று
காலையில், டூவிபுரம் மெயின்ரோட்டில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அரசு மருத்துவமனையில் பிறந்த ஐந்து பெண் குழந்தைகளுக்கு மில்லை ராஜா ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் மோதிரம் அணிவித்தார்.. அதனைத் தொடர்ந்து
தூத்துக்குடி சில்வர்புரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் மதிய உணவும், வாகைக்குளம் அலெக்ஸ் கைலாஷ் முதியோர் இல்லத்தில் மதிய உணவும், திரேஸ்புரம் அண்ணா காலனியில் பிபிலியா ஏற்ப்பாட்டில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.. தூத்துக்குடி மாநகர முழுவதும் அனைத்து வார்டுகளிலும் எம்ஜிஆர் ஜெயலலிதா பாடல்கள் ஒலிக்கப்பட்டு அந்தந்த பகுதியில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாநகரம் முழுவதும் சி.த. செல்ல பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த மாபெரும் நிகழ்ச்சி அதிமுக தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை செம குஷியில் காணப்பட்டன. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சோர்வாக இருந்த நிலையில் தற்போது அதிமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகமடைய காரணம் அடிக்கடி வர்த்தக அணி மாநிலச் செயலாளர்
செல்லப்பாண்டியன்
தொண்டர்களுக்கு நல்ல ஆலோசனை வழங்கிய வருகிற தேர்தலில் இமாலய வெற்றி பெற வேண்டும் அதற்கான அடிப்படை பணிகளை இப்போதே துவங்கி விட வேண்டும் என தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு பல்வேறு வகையில் உதவிகள் செய்து வருகிறார். இதன் வெளிப்பாடு தூத்துக்குடி மாநகரத்தில் அதிமுகவினர் கடும் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.

தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகள்
கழக மகளிர் அணி துணைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், டாஸ்மாக் தொழிற்சங்க நகர செயலாளர் கார்த்தீசன், முன்னாள் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் சி.த.செ.ராஜா சிங், முன்னாள் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சி.த.செ.ஜெபசிங், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், மாவட்ட பிரதிநிதி செல்லப்பா, முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசரியான் முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என்.சிவசுப்பிரமணியன்.. இயக்குனர்கள் அன்பு லிங்கம் பாலசுப்ரமணியன் வட்ட செயலாளர்கள்லயன்ஸ் டவுன் சகாயராஜ் ஜெனோபர் நயினார் மில்லை ராஜா அருண்குமார் அந்தோனி ராஜ் முன்னாள் வட்ட கழக செயலாளர்கள் திருமணி மோகன் கோட்டாள முத்து, ஜெகதீஸ்வரன் பாபநாசம் சகாயராஜ், மாரியப்பன் போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் சங்கர் சண்முகராஜ் கருப்பசாமி ராஜேந்திரன் பேச்சியப்பன் முருகன் மின்சார பிரிவு பண்டாரம்பட்டி கருப்பசாமி மீனவர் சங்க பிரதிநிதிகள் ஞாயம் ரொமால்ட் ஜேசுராஜ் பாலன் முன்னாள் ஒன்றிய உறுப்பினர் பெருமாள் தாய் சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ் பிரபாகரன் மாவட்ட பிரதிநிதி சாந்தி மாவட்ட மகளிர் அணி சாய் சுதா மற்றும் அந்தோனி ராஜ், அந்தோனி செல்வராஜ், தணூஸ், மகராஜன் ஆறுமுகம், சித்திரை வேல், மணிகண்டன், சிவன்கோயில் இசக்கி முத்து சேவியர், சிவசாமி, ஆபிரகாம், முனியசாமி, ராஜசேகர் அனல் ராஜசேகர் அபுதாஹிர் அப்பாஸ் வெங்கடாசலம் பொன்ராஜ்
ஜோதிகா மாரி ஆறுமுகம், விக்னேஷ் பாண்டியன் மகளிர் அணியினர் ஜேடி அம்மா ஜுபிலியா பிபிலாம்மாள் பாப்பா சுப்புலட்சுமி பாலாம்மாள் உமா ஜீவா சாந்தா மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

