பெருந்தலைவர் காமராஜர் கல்வெட்டை இடித்து சேதப்படுத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து
கல்வெட்டை மீண்டும்
சீர் செய்து உடனடியாக அதில் நிறுவ வேண்டும் :
: தமிழக அரசுக்கு
பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.பி. மாரியப்பன்
வேண்டுகோள்…
தூத்துக்குடி, பிப், 11
கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டி பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜர் கல்வெட்டை இடித்து சேதப்படுத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து கல்வெட்டை மீண்டும் சீர் செய்து உடனடியாக அதில் நிறுவ வேண்டும் என: தமிழக அரசுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.பி. மாரியப்பன்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டி பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் கல்வெட்டை வன்ம எண்ணத்துடன் இடித்து சேதப்படுத்திய மர்மநபரை துரிதமாக கண்டறிந்து உரிய தண்டனை வழங்கிடவும், சீர்செய்து கல்வெட்டை மீண்டும் அதே இடத்தில் உடனடியாக நிறுவி பெருந்தலைவரின் நற்பெயரும், புகழும் எதிர்கால சந்ததியினர் கொண்டாடும்படி நிலைத்திருக்கும் வகையில் உடனடியாக செய்ய வேண்டும் அதில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பாதுகாக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காமராஜர் சிலைகளுக்கும், கல்வெட்டுகளுக்கும் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து பாதுகாக்க வேண்டுமென பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் NR தனபாலன் ஆணைக்கிணங்க பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் எஸ். பி. மாரியப்பன் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

