தூத்துக்குடி கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் ஸ்ரீ காமாக்ஷி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவி துர்கா ஸ்ரீதேவி தங்கப்பதக்கமும் 7ம் வகுப்பு மாணவர் ஹரி கோபாலகிருஷ்ணன் தங்கப்பதக்கமும் வெற்றி பெற்று மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்கள்.
வெற்றி பெற்ற மாணவ மாணவியும் பயிற்சியாளர் ராமலிங்க பாரதி, உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமாரசாமி, பள்ளி தாளாளர் அருணாச்சலம், பள்ளி முதல்வர் மீனா குமாரி, துணை முதல்வர் சுப்புலட்சுமி, மற்றும் அனைத்து ஆசிரிய பெருமக்களும் வாழ்த்தி பாராட்டுகளை தெரிவித்தார்கள்.

