தூத்துக்குடி மாசிலாமணிபுரம் பூங்காவில் ப்ரூஸ்லி அகாடமி நிறுவன தலைமை பயிற்சியாளர் சுப்புராஜ், மீனா ஆகியோர் பள்ளி குழந்தைகளுக்கு சிலம்பம் மற்றும் குத்துச்சண்டை ஆகிய பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த தொடக்க விழாவில் கவுன்சிலர்கள் விஜயலட்சுமி, வைதேகி, நாேகஸ்வாி, ஜெயசீலி, பவாணி, முத்துமாாி, டூவின்கிள் பள்ளி தாளாளர் சுயம்புலிங்கம், மாநகர திமுக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங், மாவட்ட ஆதிராவிட நல அணி தலைவர் பெருமாள், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சில்வெஸ்டர், பிரையண்ட்நகா் பகுதி பிரதிநிதி செல்வம், மற்றும் மலைக்கள்ளன், ஆகியோர் இந்த தற்காப்பு வகுப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இதில் மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

