தூத்துக்குடி –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி – கோரம்பள்ளம் 5வது வடிகால் மற்றும் மீன்வளக் கல்லூரி அருகே ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் குறித்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான தி கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மாவட்ட கலெக்டா் இளம்பகவத், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் பிரபு மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளா் ரவீந்திரன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளா் அருண்சுந்தா், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

