தூத்துக்குடி
தூத்துக்குடி லேடிஸ் ரெக்ரியேஷன் கிளப் முத்துநகர் பெண்கள் நல மையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற விற்பனை திருவிழா நிகழ்ச்சிக்கு தலைவர் ஷீலா தமிழரசு தலைமை வகித்தார். செயலாளர் மகேஸ்வரி, துணை தலைவர் பிரேமா பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் தேன்மதி தனுஷ்கோடி வரவேற்புரையாற்றினார்.

குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்: 1934ம் ஆண்டு பெண்களால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதை பெண்களால், பெண்களே நிர்வாகம் செய்து வருகின்றனர். இதில் பெண் உறுப்பினர்கள் மட்டும் தான் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்று கலெக்டர் அறிவுரையின்படி உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக மாநகராட்;சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக அக்கறை உள்ளவர்களையும் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள அறிவுரை வழங்கியுள்ளேன். இந்த பகுதியில் 90 ஆண்டுகாலம் தொடர்ந்து பெண்களால் நடத்தப்பட்டு வரும் இந்த கிளப்பில் பெண்களுக்கென்று நடைபயிற்சி, பூப்பந்தாட்டப் போட்டி, விளையாடும் அமைப்போடு இங்கு கட்டமைப்புகள் இருந்து வருகின்றன. இதற்கிடையில் இலவசமாக ஏழை, எளிய பெண்களுக்கு தையல் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுக்கு உறுப்பினர் சந்தா 300 ரூபாய் தான் பெறப்படுகிறது. விளையாட்டு திடலை முழுமையாக பயன்படுத்துபவர்களுக்கு அதற்கு தனியாக ரூ.300 வசூலிக்கப்படுகிறது. இப்படி பெண்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் இந்த லேடிஸ் கிளப்பை அனைத்து தரப்பு பெண்களும் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கு மற்றவர்களுக்கு வழிகாட்டும் வகையில் பெண்கள் விற்பனை செய்யும் இந்த தீபாவளி விற்பனை கண்காட்சியில் பல பொருட்கள் அவர்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தொழில் முனைவோருக்கு ஒரு வழிகாட்டும் இடமாகவும் அமையப்பெற்றுள்ளது. இதை நன்கு பயன்படுத்திக் கொண்டு நமக்கு நாமே முன்மாதிரியாக செயல்பட வேண்டும். இனி மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை இதுபோன்ற விற்பனை கண்காட்சி நடைபெறும் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
பின்னர் தீபாவளி விற்பனை கண்காட்சியை பார்வையிட்டு, மக்களோடு மக்களாக, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை வாங்கி ருசித்தார்.
விழாவில், எபனேசர் பெரியசாமி, சுதா சுதன்ஹீலர், கீர்த்தனார் மகிழ்ஜான், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் அன்னலெட்சுமி, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், கவுன்சிலர்கள் ரெக்ஸ்லின் ஜெயசீலி, சரண்யா, மரிய கீதா, தனலெட்சுமி, வைதேகி, பவானி, நாகேஸ்வரி, சுப்புலெட்சுமி, மகேஸ்வரி, ஜான்சிராணி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தேவி, மாநகர அமைப்பாளர் ஜெயக்கனி, துணை அமைப்பாளர் நாராயண வடிவு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணா தேவி, போல்பேட்டை பகுதி துணை அமைப்பாளர் ரேவதி, மற்றும் வக்கீல் சொர்ணலதா உள்பட பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
பொருளாளர் ராஜாத்தி நன்றியுரையாற்றினார்.

