தூத்துக்குடியில் ஐப்பசி திருகல்யாண திருத்தேரோட்டம் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட கலெக்டா் இளம்பகவத், எஸ்.பி அல்பட்ஜான் பங்கேற்பு
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது சித்திரை திருவிழா தேரோட்ட வைபவம் மற்றும் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட வைபவமாகும்.
ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட வைபவம் வருகிற அக்டோபர் 19ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி ஒவ்வொரு நாளும் சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சிறப்பு தீப ஆராதனைகளுக்கு பின்பு ரத வீதியில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தேரோட்டம் வருகிற அக்டோபர் 27ம் தேதி பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறவுள்ளது. சங்கரராமேஸ்வரர் மற்றும் பாகம்பிரியாள் திருக்கல்யாண வைபவம் வருகிற அக்டோபர் 29ம் தேதி நடைபெறுகிறது. தேரோட்ட திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் சிவன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி முன்னிலை வைத்தார். கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி, சிவன் கோவில் அறங்காவல குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், சாந்தி, கணக்கர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருத்தேரோட்ட வைபவத்தில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட கலெக்டா் இளம்பகவத், எஸ்.பி அல்பட்ஜான், ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக சிவன் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தெரிவித்தார்.

