தூத்துக்குடி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாநகராட்சிக்குட்பட்ட பாரதி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு வடிகால் வசதி வேண்டி கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த பகுதியை பார்வையிட்டு வரும் நாட்களிலேயே நிறைவேற்றி தருகிறேன் என்று மேயா் ஜெகன் பொியசாமி கூறினாா்.
உடன் துணை மேயர் ஜெனிட்டா, பகுதி செயலாளர் சுரேஷ்குமார், கவுன்சிலர் சரவணகுமார் வட்ட செயலாளர்கள் சுரேஷ், சரவணன்,முன்னாள் கவுன்சிலர் இசக்கிமுத்து முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், மற்றும் போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பா் உள்பட பலர் உடனிருந்தனர்.

