வடக்கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சி தயாராக உள்ளது : பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
தூத்துக்குடி, ஆக்,3
தமிழகம் முதலமைச்சர் உத்தரவுக்கு இணங்க தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வாரமும் மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. ஐந்தாவது வாரமாக ஸ்டேட் பாங்க் காலணியில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், வரவேற்புரையாற்றினார். பின்னர் மேயர் ஜெகன்பெரியசாமி பேசுகையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் எல்லா வகையிலும் போர்க்கால அடிப்படையில் பணிகளை செய்துள்ளோம். பல்வேறு பகுதிகளில் புதிய கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதைப்போல் இந்த மாநகராட்சி பகுதியில் 80 சதவீதம் சாலைப் பணிகள் முடிவுப்பெற்றுள்ளனர். 20 மீட்டர் தார்ச் சாலைகளும் 10 மீட்டர் பேவர்பிளாக் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் மாசு ஏற்படாமல் பல இடங்களில் தடுக்கப்பட்டுள்ளன. விரிவான சாலைகள் கிடைப்பதின் மூலம் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படுகிறது. கடந்த காலத்தில் 100 ஆண்டுகளில் பெய்யாத மழை பெய்ததால் கயத்தார் கழுகுமலை உள்ளீட்ட பகுதிகளில் சிறு குளங்கள் உடைப்பு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் புகுந்ததால் புறநகர் பகுதி உள்பட நகர்ப்பகுதிகளிலும் பல பாதிப்புகள் ஏற்பட்டன. அதையெல்லாம் தடுக்கும் வகையில் கோரம்பள்ளம் குளம் நிரம்பி கடலுக்குள் செல்லும் அந்த வழித்தடங்கள் முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளது. அதைப்போல் பக்கிள் ஒடை தூர்வாறும் பணியும் முழுமையாக நடைபெற்றுள்ளது. அதனால் இனி வரும் வடகிழக்கு பருவமழையை கண்டு பொதுமக்கள் பயப்பட வேண்டாம். வெளியில் இருந்து வரும் மழை நீரையும் தடுக்கும் வகையில் பல நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த குறைதீர்க்கும் முகாமில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உடனடியாக திருத்தம் செய்து ஆணை வழங்கப்படுகிறது. மற்ற அனுமதி உள்ளீட்ட பல மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் முழுமையாக தீர்வு காணப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்கள் மகிழ்ச்சியாக உள்ளன. பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் முனீர்அகமது, கவுன்சிலர்கள் ரெங்கசாமி, கீதாமுருகேசன், சுதா, நாகேஷ்வரி, காந்திமதி, சுப்புலெட்சுமி, ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், தெய்வேந்திரன், ஜாக்குலின்ஜெயா, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் அரசுத்துறை அலுவலர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

