தூத்துக்குடி, அக், 3
தூத்துக்குடியில்
பல வீடுகளில் இரவு நேரங்களில் கைவரிசை காட்டி வந்த பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டான். இவனிடமிருந்து தங்கம், வெள்ளி பொருட்கள் பெரும் அளவு மீட்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவுப்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாமதன் மேற்பார்வையில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன். உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் மற்றும் நகர உட்கோட்ட தனி அலுவல் காவலர்கள் சகிதம் நகர உட்கோட்டத்தில் நடந்துள்ள இரவு நேர திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களை தேடி வரும்போது தூத்துக்குடி
ரகுமத்துல்லா புரத்தைச் சேர்ந்த முகமது யூசுப் மகன் மொய்தீன் என்பவரை கண்காணித்து சோதனை செய்தபோது அவர் இன்று 03.10.2024ம் தேதி அதிகாலையில் மில்லர்புரத்தில் முருகேசன் நாடார் மகன் சிவபிரகாஷ் நாராயணன் என்பவரது வீட்டில் இருந்து CCTV DVR யை திருடிக்கொண்டு சென்றபோது மேற்படி போலீஸ் பார்ட்டியிடம்
சிக்கி கொண்டார் அவரை விசாரித்தததில் அவர் ஏற்கனவே தூத்துக்குடி மத்தியபாகம்
காவல் நிலைய எல்கையில் செப்டம்பர் மாதம் 21 ம் தேதி இரவு டூவிபுரம். 5வது தெருவில் இரண்டு வீடுகளில் தங்க நகைகளையும் வெள்ளி
பொருட்களையும் தெற்கு காவல்
நிலைய எல்கையில் ஜீலை மாதம் 24ம் தேதி மில்லர்புரம் பள்ளிவாசல் தெருவில் ஒரு வீட்டில் தங்க நகைகளையும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி சிதம்பர நகர் 3 வது தெருவில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் ரூபாய் ஒரு லட்சத்தையும் களவு செய்ததையும் ஒப்புக்கொண்டு மேற்படி வீடுகளில் களவு செய்த சுமார் 96 கிராம் தங்க பொருட்களையும், 465 கிராம் வெள்ளி பொருட்களையும் ஆஜர் செய்தத்தை கைப்பற்றப்பட்டது மேலும் இவர் மீது சேலம் மாநகர காவல் நிலையங்களிலும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திலும் சென்னை, திருவள்ளூர், தாலுகா காவல் நிலையத்திலும் வேலூர் தெற்கு குற்றப்பிரிவு காவல்
நிலையத்திலும் முந்தைய வழக்குள் என மொத்தம் 10 வழக்குகள் உள்ளது. என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் இவருடன் இணைந்து வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளார்களா என போலீசார் மேலும் புலன் விசாரணை செய்து வருகிறார்கள். என்று கூறப்படுகிறது.

