தூத்துக்குடி,
மே,12
மாப்பிள்ளையூரணி கிராம ஊராட்சி பகுதிகள் தூய்மையாகயிருக்க வேண்டுமென சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தூய்மை காவலர்கள் செய்து வரும் சிறப்பான பணிகளை பாராட்டு வகையில் அவர்களுக்கு அறுசுவை விருந்தளித்து பாராட்டிய பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார்
தூய்மை காவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு உபகரணங்கள், முககவசம், கையுறை,
தொப்பி, ஆகியவற்றை
வழங்கி பாதுகாப்போடு பணியாற்ற வேண்டுமென பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார். கேட்டுக்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி கிராம ஊராட்சியில் தூய்மைக் காவலர்கள் மூலம் குப்பை அகற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் திறம்பட செயல்படுத்தப் பட்டுவருகிறது.
மேற்கண்ட ஊராட்சி பகுதியில் உள்ள
150 குடும்பங்களுக்கு ஒரு பணியாளர் என்ற வகையில் வேலையில் ஈடுபடுத்தப்படுள்ள இவர்கள் தூய்மைக் காவலர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த
தூய்மைக் காவலர்கள் மூலம் குப்பை அகற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாஸ் கிளீனிங்
என்ற பெயரில் ஒவ்வொரு பகுதியை தேர்வு செய்து அனைத்து தூய்மை காவலர்கள் மற்றும் பணியாளர்கள் கொண்டு தூய்மைப்படுத்தும் பணியும் நடைபெற்று வரும் நிலையில்
நாள்தோறும் இந்த கிராம ஊராட்சி பகுதிகளில் தூய்மைப் பணிகளில் ஈடுபடும் தூய்மை காவலர்கள் மற்றும் பணியாளர்கள்
அக்னி நட்சத்திரம் முன்னிட்டு சுட்டெரிக்கும் இந்த வெயிலையும் பொருட்படுத்தாமல் கிராமப் பகுதிகள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக பொறுப்புடன் செய்துவரும் இந்த சிறப்புமிக்க பணியை பாராட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும் மாப்பிள்ளை யூரணி பஞ்சாயத்து தலைவருமான சரவணகுமார்
தூய்மை காவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரையும்
வரவழைத்து
அவர்கள் பணியை பாராட்டும் வகையில் அவர்கள் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கியதோடு
தூய்மை காவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு உபகரணங்கள், முககவசம், கையுறை,
தொப்பி, ஆகியவற்றை வழங்கி பாராட்டினார்.
பின்னர் பஞ். தலைவர் சரவணகுமார்
கூறுகையில்
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது கிராம ஊராட்சி தான். ஊராட்சி வளர்ச்சி மூலம் தான் நாட்டின் வளர்ச்சியும் அமையும் என்று தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுரையின் படி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி மாப்பிள்ளையூரணி ஊராட்சியை மாவட்டத்தில் தன்னிலை பெற்ற வளர்ச்சியடைந்த ஊராட்சியாக மாற்றுவதற்கு அனைத்து பணிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதன்படி தூய்மையான கிராமங்கள் என இந்த கிராமம் திகழ வேண்டும் என பஞ்சாயத்து சார்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு. வருகின்றன. தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மை காவலர்கள் மற்றும் பணியாளர்கள்
நாள்தோறும் தங்கள் பணிகளை திறம்படச் செய்து வந்தாலும் கூட
சுட்டெரிக்கும் இந்த வெயில் காலத்திலும் தங்களை வருத்தி தூய்மைப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து மக்கள் சார்பாக
தூய்மை காவலர்கள் அனைவருக்கும்
அறுசுவை விருந்து வழங்கி அவர்களுக்கு பணி பாதுகாப்புக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது. என்று தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, இளைஞர் அணி கௌதம் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

