தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் தினவிழா மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையில், செவிலியர் கண்காணிப்பாளர் சாந்தா குமாரி முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா கலந்து கொண்டு; சிறப்பாக சேவை செய்த மூத்த செவிலியர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். விழாவில் பேசிய கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா; செவிலியர்களின் தியாக மனப்பான்மையையும், கருணை நிறைந்த பணிகளையும் பாராட்டினார். முன்னதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையுரை ஆற்றினார்.
செவிலியர் கண்காணிப்பாளர் சாந்தா குமாரி, செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் ஞானசிரோமனி ஹெலன் இந்திராணி வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்க இணை செயலாளர் சீ.செல்வம் அனைவரையும் வரவேற்றார், செவிலியர் சங்க செயலாளர் உமா மகேஸ்வரி வரவேற்பு கவிதை வாசித்தார், நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான செவிலியர்கள், மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் பணி உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் துணை மருத்துவ கண்காணிப்பாளர் குமரன், துணை முதல்வர் கலைவாணி, எலும்பியல் துறை பேராசிரியர் ஜேம்ஸ், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி மற்றும் அரசு செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். செவிலியர்கள் மற்றும் செவிலியர் பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவாக செவிலியர் ஜெலென்ஸ் நன்றி தெரிவித்தார்.

