தூத்துக்குடி ,
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு 05.02.24 இன்று முதல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளது. உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் – நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாடு கருத்துக்கள் என்கின்ற பெயரில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி தலைமையிலான குழுவினர் தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். முதல் நாளான இன்று தூத்துக்குடி, மாணிக்கம் மஹாலில் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டனர். தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு திமுக மாவட்டம், விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு திமுக மாவட்டம், ராமநாதபுரம் திமுக மாவட்டம், ஆகிய 5 திமுக மாவட்டத்தில் உள்ள பொது மக்களிடம் கருத்துக் கேட்கும் பணி நடைபெற்றது. இதில் அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க நிர்வாகிகள் எட்வின் சாமுவேல், கோடீஸ்வரன், சிஐடியு மாவட்ட செயலாளர் ரசல், மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் சரவணகுமார், எச்.எம்.எஸ் யூனியன் நிர்வாகி துறைமுகம் சத்யா, வழக்கறிஞர் அர்ஜுன், மற்றும் நாட்டு படகு மீனவர் சங்கத்தினர், லாரி ஓனர் அசோசியேசன் மற்றும் விளாத்திகுளம் புதூர் விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கோரிக்கை மனுக்களை குழுவிடம் அளித்தனர்.
குழு தலைவர் கனிமொழி எம்பி யிடம் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அளித்த மனுவில், மாநகர மக்களின் குரலாக;
தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தூத்துக்குடி வி.எம்.எஸ் நகரில் கூடுதலாக 5 வது ரயில்வே கேட் மற்றும் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி ஆராய்ச்சி மையம் எதிரே அரசுக்கு சொந்தமான சுமார் 25 ஏக்கர் நிலத்தில் கருத்தரங்கு, கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வசதியாக சர்வதேச தரத்தில் வர்த்தகம் மையம் வேண்டும்.
தூத்துக்குடியில் உள்ள பயணிகள் மற்றும் வர்த்தகர்களின் வசதிக்காக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ஒரு விரைவு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு குளத்தூர், விளாத்திகுளம், அருப்புக்கோட்டை வழியாக புதிதாக ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
துறைமுகம், கணநீர் ஆலை, விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில், ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் அமைக்கவும், கேந்திர வித்யாலயா பள்ளிகள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட 6 கோரிக்கைகள் அடங்கிய அடங்கிய மனுவினை அளித்தார். தூத்துக்குடி பயணிகள் நல சங்கம் சார்பில் விவிடி சிக்னல் மேம்பாலம் உடனடியாக அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
முதற்கட்டமாக தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் நாடாளுமன்றத்தில் தொகுதியில் உள்ள விவசாயிகள், ஆசிரியர்கள், தொழில் முனைவோர், வியாபாரிகள், குடும்பத் தலைவிகள், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், மாணவர் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், என பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
கருத்து கேட்பு கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்னன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.கே.எஸ்.இளங்கோவன் (முன்னாள் எம்.பி), தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழக அரசு தலைமைக் கொறடா கோ.வி.
செழியன் எம்.எல்.ஏ, எழிலரசன் எம்.எல்.ஏ, ராஜேஸ்குமார் எம்.பி, டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ, ஒட்டப்பிரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்குப் பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாகவோ, சமூகவலைதளங்கள் மூலமாகவோ, தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப பொதுமக்களுக்கு தி.மு.க. தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, துணை மேயர் ஜெனிட்டா, திமுக மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் துறைமுகம் புளோரன்ஸ், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் வடக்கு மதியழகன், தெற்கு ராமஜெயம், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் அசோக், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், சின்ன பாண்டியன், சரவணகுமார், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூாிதங்கம், கோட்டுராஜா, ராஜா,
அரசு வழக்கறிஞர் ஆனந்த் கேபிரியல் ராஜ், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் இளைஞரணி அமைப்பாளர் அருன் சுந்தர், மாநகர அயலக அணி அமைப்பாளர் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் விஜயராஜ், ஐடி விங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.என். அண்ணாதுரை, ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் பரமசிவன், தொழிலாளர் நல அணிய அமைப்பாளர் முருகன் இசக்கி, பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், நிர்மல் ராஜ், ஜெயக்குமார், ரவீந்திரன்,
மாவட்ட பிரதிநிதிகள் இசக்கி ராஜா, மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் வட்டச் செயலாளர்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

