தூத்துக்குடி பிப்,5
தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வதிலை செல்வம்
அவர்கள் பிறந்தநாள்
05/02/24 அன்று வத்தலகுண்டில் உள்ள
அவரது இல்லத்தில் வைத்து சீரும் சிறப்புமாக நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில்
பல முக்கிய பிரமுகர்கள் , சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள், கட்சி மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பொதுச்செயலாளர் வதிலை செல்வம் அவர்களுக்கு நேரில் வந்து வாழ்த்துகள் தெரிவித்தனர்
பொதுச் செயலாளர் வதிலைச் செல்வம் அவர்கள் கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு ஊட்டினார். நிர்வாகிகள் பலரும் சால்வை மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

வெகு சிறப்பாகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட அவை தலைவர் கோடை ஆனந்த், பிரேம், ரமேஷ், உள்ளிட்ட கொடைக்கானல் நகர நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் ஏராளமானவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

