தூத்துக்குடி.
சட்ட மாமேதை அம்பேத்கரின் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் அருகில் உள்ள அவரது முழுஉருவ சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனர் என்.ஆர். தனபாலன் அறுவுறுத்தலின்பேரில் அம்பேத்கரின் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ், மாவட்ட அவைத்தலைவர் பொன்ரத்தினம், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ஆர். அழகுதுரை, மாவட்ட அவை துணைத்தலைவர் தாஹீர் ஷரிப், மாவட்ட துணைச் செயலாளர் எம்.கார்த்திக், தமிழ்நாடு நாடார் பேரவை தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் என். சண்முகவேல், மாவட்ட மாணவரணி செயலாளர் கதிர், மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சக்தி, நட்டாத்தி ஒன்றியம் அலாட்குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

