தூத்துக்குடி.
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டு அவற்றை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் மழை பெய்து வந்தது. தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையால் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி 17வது வார்டுக்குட்பட்ட பி அன் டி காலனி பகுதியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சாலை மற்றம் கழிவுநீர் வடிகால் கால்வாய் சீரமைப்பதற்கான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி உதவி ஆணையர் சேகர், கவுன்சிலர் கண்ணன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

