தூத்துக்குடி,
தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அனைத்து துறைகளிலும் மக்கள் நலன் கருதி வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவத்துறை என பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொலைநோக்கு பார்வையோடு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் தமிழகம் வளர்ச்சியடைந்து முதன்மை மாநிலமாக உருவாகும் வகையில் உன்னதமான பணிகள் அனைத்து துறைகளிலும் நடைபெறுகின்றன.
தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத்திட்ட சிறப்பு முகாம் 3 தினங்கள் தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கியது. இங்கு வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகத்தில் குறிப்பிட்ட தேதிகளில் புகைப்படம் எடுத்து பொதுமக்கள் சென்று பயனடைந்து கொள்ளலாம்.
இந்த சிறப்பு முகாமின் 3வது தினத்தில் ஆய்வு மேற்கொண்ட வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தெரிவிக்கையில்: மருத்துவ காப்பீடு தேவைப்படுவோர் குடும்ப அட்டை அசல், மற்றும் நகல், ஆதார்கார்டு அசல், மற்றும் நகல், ஆகிய விவரங்களுடன் மருத்துவ காப்பீடு அட்டையை பெற்று பயனடையவும் பழைய கலைஞர் காப்பீடு திட்ட அட்டை வைத்திருப்பவர்களும் புதுப்பித்துக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது. அதில் சர்க்கரை நோய் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, சுகாதார பணிகள் துறை இணை இயக்குநர் பொற்செல்வன், வடக்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் சுப்புலெட்சுமி, பொன்னப்பன், கந்தசாமி, அந்தோணி பிரகாஷ் மார்ஷல், ஜெயசீலி, வைதேகி, பவானி மார்ஷல், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் பெல்லா, அல்பட், மகேஸ்வரசிங் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

