படிப்பறிவோடு பொதுஅறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினார்
தூத்துக்குடி தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு விலையில்லா இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஞானம் தலைமை வகித்தார். தாளாளர் மலர் முன்னிலை வகித்தார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் 239 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி பேசுகையில்: கல்வியையும் மருத்துவத்தையும் தமிழக முதல்வர் தனது இருகண்களாக கருதி முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறார். சமூகவலைதளங்களை மாணவிகள் பார்க்கும் போது அதில் லைக் கமெண்ட் பண்ணக்கூடாது இதனால் உங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும். நீங்கள் படிக்கக்கூடிய படிப்பு இந்த சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும். பள்ளி படிப்பு நமக்கு முக்கியமான கால கட்டம். தன்னம்பிக்கையுடன் கல்வியை கற்று அறிவுத்திறனையும் பெற்று இந்த சமுதாயத்திற்கு மட்டுமின்றி நாட்டிற்கும் உங்கள் வீட்டிற்கும் நன்மை கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும். உங்கள் வாழ்வில் ஓளியேற்றுவதற்காக மெழுகுவர்த்தியை போல் உருகி உங்களுக்கு வெளிச்சத்தை கொடுக்கும் ஆசிரியர்களை மதித்து நடக்க வேண்டும் அன்னையும் பிதாவும் முன்னறிவு தெய்வம். இங்கு படிக்கின்ற மாணவிகள் கல்லூரி படிப்பையும் பயின்று, பல்வேறு உயர் பதவிகளுக்கு வர வேண்டும். படிப்பறிவோடு பொதுஅறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும். தமிழக முதலமைச்சருக்கு கல்வியும் மருத்துவ துறையும் இரண்டு கண்கள் என்று பல விழாக்களில் அவர் பேசியுள்ளார். நாட்டின் எதிர்கால தூண்களாக விளங்கக்கூடிய உங்களை மனதார வாழ்த்துகிறேன் என்று பேசினார்.
விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

