தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள குறிஞ்சி நகர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மாற்றுத்திறனாளிகளான சாத்தான்குளம் வட்டம், கோமநேரி திமுக கிளைச் செயலாளர் நல்லகண் மற்றும் கோவில்பட்டி வட்டம், நாலாட்டின்புதூர் திமுக கிளைச் செயலாளர் முத்துராமலிங்கம் ஆகியோருக்கு தனது சொந்த செலவிலிருந்து ரூ.1,81.000 மதிப்பிலான மூன்று சக்கர வாகனத்தை கனிமொழி எம்.பி வழங்கினார். சண்முகையா எம்.எல்.ஏ உடனிருந்தார்.

