• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

எதிர்காலம் திராவிட இயக்கச் சிந்தனைகள் உள்ளவர்களிடம் இருக்கும் – கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

policeseithitv by policeseithitv
November 30, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
எதிர்காலம் திராவிட இயக்கச் சிந்தனைகள் உள்ளவர்களிடம் இருக்கும் – கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திமுக மகளிர் அணி சார்பில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி முன்னெடுப்பில் நடைபெறும் ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்டம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உள்ள அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட் மஹாலில் இன்று (30/11/2023) துவங்கியது.

‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டியை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி துவக்கி வைத்து, போட்டியாளர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு, விருதுநகர் தெற்கு திமுக மாவட்ட செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

 

நிகழ்வில் கனிமொழி எம்.பி பேசியது: இன்று நடைபெற்று இந்த நிகழ்ச்சி மனதிற்கு மகிழ்ச்சியையும், நிறைவைத் தரக்குடிய ஒன்றாக இருந்தது. இந்த போட்டியில் பங்கேற்பாளர்களின் உழைப்பு, முயற்சிகளை காணும்போது, எதிர்காலம் திராவிட இயக்கச் சிந்தனைகள் உள்ளதாகவும், தமிழ் பெருமையும், வரலாற்றையும் புரிந்துக்கொண்டுள்ள நமது பிள்ளைகளின் கையில் இருக்கப் போகிறது என்ற நல்ல நம்பிக்கையை எங்களுக்கு தந்துள்ளது. இரண்டு இலட்ச போட்டியாளர்களைக் கொண்டுள்ள இந்த போட்டியில், இந்த சுற்றுவரை வந்துள்ள அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

 

முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமார், மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி எம்.எல்.ஏ, இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் ச. தங்கபாண்டியன், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.

 

ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண்கள் பெறும் குழுக்கள் மண்டல சுற்றுக்கு முன்னேறுவார்கள். இது ஒரு குழு வினாடி வினா போட்டியாக இருக்கும், ஒரு குழுவில் மூன்று நபர்கள் பங்குபெறுவர். கலைஞர் 100 வினாடி வினா போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டிகள், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உள்ளடக்கிய 12 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, இரு பிரிவினருக்கும் தனித்தனியே நடைபெறும் இப்போட்டி மொத்தம் 5 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண் எடுத்த ஒரு குழு என, 39 குழுக்கள் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டியில் பங்குபெறுவர்.

மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டி துவக்க விழாவில், விருதுநகர் மண்டலத்தில் (விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்) ஆகிய மாவட்ட குழுக்கள் பங்கேற்றனர். 18 வயதிற்கு மேற்பட்டோர் காண போட்டியில் சிவகங்கை அணி வெற்றிபெற்றது, இந்த குழுவில் மோகன், அறிஷேவர், பிரபு ஆகியோர் பங்கேற்றனர். 18வயதிற்கு உட்பட்டோர் காண போட்டியில் சிவகங்கை அணி வெற்றிபெற்றது, இந்த குழுவில் குகன், சிவசங்கர், குணால் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

 

அரையிறுதியின் வெற்றியாளர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். இரு பிரிவுகளிலும் இறுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணிகளுக்கு தலா ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இரு பிரிவுகளிலும் 2ஆம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இரு பிரிவுகளிலும் மூன்றாமிடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படும். வெவ்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குகிறார்.

Previous Post

படிப்பறிவோடு பொதுஅறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினார்

Next Post

தூத்துக்குடி 13-வது வார்டுக்குபட்ட பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

Next Post
தூத்துக்குடி 13-வது வார்டுக்குபட்ட பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி 13-வது வார்டுக்குபட்ட பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In