தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் பணிபுரியும் மாநகராட்சி டிரைவர்கள் சார்பில் ஆயுத பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பொதுமக்களுக்கும் மாநகராட்சிக்கும் பாலமாக இருந்து செயல்படக் கூடியவர்கள் மாநகராட்சி டிரைவர்கள். அலுவலகப் பணிகள் மட்டுமல்லாமல் வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களிலும், சாலை மறியல், கலவரம் போன்ற இன்னல்கள் நிறைந்த நேரங்களிலும்
தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் கடமை உணர்வோடு பணியாற்றி வருகிறார்கள். அதுபோல் மாநகர அலுவலர்கள் மாநகர வளர்ச்சி பணிகளுக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வுகள் மேற்கொள்ளும் போது டிரைவர்கள் பணி மிகவும் முக்கிய வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆயுத பூஜை என்றாலே, வாகன ஓட்டிகள் தினமாகவே அனைத்து வாகன ஓட்டிகளும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பணி புரியும் டிரைவர்கள் ஒன்றிணைந்து ஆண்டுதோறும் ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் ஆயுத பூஜைக்கான விழா ஏற்பாடுகளை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் வாகனங்களில் வாழைக்கன்று தோரணங்கள் கட்டியும், சந்தனம் குங்குமம் பூசி அலங்கரிக்கப்பட்டது. பின்னர் பொரி, கடலை, சுண்டல், பழம் போன்ற பொருட்களுடன் சர்க்கரை பொங்கல் படையல் வைத்து சரஸ்வதி தேவிக்கும் மற்றும் வாகனங்களுக்கும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இவ்விழாவில், மாநகராட்சி டிரைவர்கள் இளங்காமணி, சா.ராஜேந்திரன், எம்.தங்கராஜ், ஆர்.ராஜா, ஜாய்சன், ஈஸ்வரன், கிறிஸ்டோபர், மாரி குட்டி, மாரியப்பன், முருகன் சாமிஜி உட்பட மாநகராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு:
சிறப்பு செய்தியாளர் சக்திவேல்

