தூத்துக்குடி
அக், 24
நவராத்திரி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி
மூத்த பத்திரிகையாளர்
லட்சிய பாதை சண்முகசுந்தரம், ரேகா தம்பதியினர் கீழ சண்முகபுரத்தில்உள்ள அவர்களது
இல்லத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் அமைத்திருந்தனர், ஆண்டுதோறும் தசராவை முன்னிட்டு சண்முகசுந்தரம், ரேகா, தம்பதியினர் அவர்களது இல்லத்தில் கொலு பொம்மைகள் அமைப்பது வழக்கம் அதுபோல் இந்த ஆண்டும் தசராவை முன்னிட்டு அவர்களது
வீட்டில் கொலு பொம்மைகளை வைத்து அலங்கரித்து வழிபாடு நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் நவராத்திரி விழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி விழாவையொட்டி மக்கள் தங்கள் வீடுகளில் ஒன்பது நாட்களும் கொலு பொம்மைகளை வைத்து அலங்கரித்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதுபோல் தூத்துக்குடியில் பத்திரிகையாளர்
சண்முகசுந்தரம், ரேகா தம்பதியினர்
மிக பிரம்மாண்டமாகவும், ஆன்மீக நண்பர்கள் பாராட்டும் வகையில் கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டனர்
இந்த தம்பதியினர்
எந்தெந்த ஊருக்கு போனாலும் அந்தந்த கடவுளை வாங்குவது வழக்கம் அதேபோல் குருவாயூர் கிருஷ்ணன், டெல்லிமதுரா பிருந்தாவன கிருஷ்ணர், அயோத்தில உள்ள ராமர், பூரி ஜெகநாதர், போன்ற அந்தந்த ஊரில் பிரசித்தி பெற்ற சிற்பங்கள் மற்றும் வயதான தாத்தா பாட்டி பொம்மைகளும், லட்சுமி வகையான பொம்மைகள், சிவன் பொம்மைகள், வளைகாப்பு பொம்மைகள், மீனாட்சி திருக்கல்யாணம், சீனிவாசர் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம் பொம்மைகள், சரவண பொம்மை, சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த கதையை விளக்கும் பொம்மை செட், விவசாயத்தை பிரதிபலிக்கும் பொம்மை செட், காது குத்து விலா செட், கீதை உபதேசம் செட்டு கைலாய பர்வதம் செட், 18 சித்தர்கள் செட்டு போன்ற பொம்மைகள் செட்டுகளை அவர்களது இல்லத்தில் வைத்து
அம்மனை வழிபட்டு இதை ஒரு விழா போல் எடுத்து வழிபட்டு வருகின்றனர். இதில் மக்கள் எல்லா வளமும் பெருக செய்து, மக்கள் எந்த நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும், தொழில் வளம் பெருக வேண்டும் எனவும் பிராத்தனை செய்தனர். இந்த மிக பிரம்மாண்டமான கொலு பொம்மையை அக்கம் பக்கத்தில் உள்ள, பெண்கள், குழந்தைகள், ஆன்மீகவாதிகள் என ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இந்நிலையில் பத்திரிகையாளர் வீட்டில் நவராத்திரி கொலு பொம்மைகள் சிறப்பாக அமைத்து இருப்பதை அறிந்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சர்ப்ரைஸ் விசிட்டாக பத்திரிகையாளர் சண்முகம் சுந்தரம், ரேகா, இல்லத்திற்கு வருகை தந்தார்.

அமைச்சர் கீதா ஜீவன் திடீர் வருகையே எதிர்பார்க்காமல் இருந்த பத்திரிகையாளர் குடும்பத்தினர் அமைச்சர் வருகை கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.பின்னர்
அமைச்சர் கீதா ஜீவனை
பத்திரிகையாளர் சண்முகம் சுந்தரம், ரேகா, தம்பதியினர் வரவேற்றனர்,
பின்னர்
சண்முகம் சுந்தரம், ரேகா,
வீட்டில் அமைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு கொலு பொம்மைகளையும் பார்த்து அமைச்சர் கீதா ஜீவன் கண்டு ரசித்தார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது: தசரா திருவிழாவை முன்னிட்டு விரதம் இருந்து மிகுந்த பக்தியோடு சாமி தரிசனம் செய்து வரும் அனைவருடைய வாழ்விலும் மேன்மை பெற வேண்டும் தொழில், உடல் நலம்,என அனைத்து செல்வங்கள் பெற்று இறைவன் அருளால் செல்வ செழிப்போடு விளங்க வேண்டும் என இந்த நன்னாளில் இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன், என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாமன்ற உறுப்பினர் பேபி ஏஞ்சல், ஆல்பர்ட் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

