தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே உள்ள சங்கரப்பேரி விளையாட்டு மைதானத்தில் டி-நகர் ஸ்கார்பியன்ஸ் நடத்தும் முதலாமாண்டு கிரிக்கெட் திருவிழா நடைபெற்றது.
இந்த கிரிக்கெட் போட்டியில் 32 அணிகள் பங்கேற்று விளையாடியது. முதல் பரிசு மாதா ரூ.25000, இரண்டாம் பரிசு ரூ.15000, மூன்றாம் பரிசு ரூ.10000, 4வது பரிசு ரூ.8000, 5வது பரிசு ரூ.6000, 6வது பரிசு ரூ.4000, 7வது பரிசு ரூ.3500, 8வது பரிசு ரூ.3000, 9வது பரிசு ரூ.2500 என போட்டிக்கான பரிசு தொகை வழங்கப்பட்டது.
இதில், முதலிடத்தை மாதாநகர் அணியும், இரண்டாமிடத்தை ஸ்கார்பியன் தாளமுத்துநகர் அணியும், மூன்றாமிடத்தை கிரீன் ஸ்டார் அணியும், நான்காமிடத்தை விசிசி பிரையண்ட் நகர் அணியும், ஐந்தாமிடத்தை குமரன் நகர் அணியும், ஆறாமிடத்தை ரெட் ரோஸ் அணியும், ஏழாமிடத்தை ஆலங்குளம் அணியும், எட்டாமிடத்தை 3 செண்ட் அணியும், ஒன்பதாமிடத்தை திசையன்விளை அணியும் பிடித்து வெற்றி பெற்றது.
போட்டியில் முதலிடம் பிடித்த அணியினருக்கு தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் முதல் பரிசையும் கோப்பையும் வழங்கி, வெற்றி பெற்ற அணியினரை பாராட்டினார்.
பின்னர், போட்டியில் வெற்றி பெற்ற அணியினர்களுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி (எ) பொன்பாண்டி, கிழக்கு ஒன்றிய திமுக துணை செயலாளர் கணேசன், வக்கீல் குமார், ஜோதிபாசு நகர் கிளை செயலாளர் வேல்ராஜ், திமுக நிர்வாகி மாரியப்பன் ஆகியோர் பரிசு மற்றும் கோப்பை வழங்கினார்கள். மேலும், போட்டியில் கலந்து கொண்ட அணியினருக்கு கிரிக்கெட் உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்கம் மாரிமுத்து, ஒன்றிய சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், பாரி, மணிராஜ், கௌதம், சுரேஷ், தாஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கான ஏற்பாடுகளை சமிர்வியாஸ் நகர் கிளை செயலாளரும், 14வது வார்டு உறுப்பினருமான ஜேசுராஜா செய்திருந்தார்.

