• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி அமைச்சர்கள் சுப்பிரமணியன், கீதாஜீவன் பங்கேற்பு

policeseithitv by policeseithitv
September 30, 2023
in Uncategorized
0
தூத்துக்குடியில் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி அமைச்சர்கள் சுப்பிரமணியன், கீதாஜீவன் பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி அமைச்சர்கள் சுப்பிரமணியன், கீதாஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி கடற்கரை சாலை தனியார் ஹோட்டல் முன்பிருந்து ‘நடப்போம் நலம்பெறுவோம்” எனும் நோக்கில் 8 கி.மீ. தூரம் பொதுமக்கள் கலந்து கொண்ட நடைபயிற்சி நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், உள்ளிட்ட பலர் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

பின்னர் உலக இருதய தினம் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து அமைச்சர் சுப்பிரமணியன் பேசுகையில் முதலமைச்சர் உத்தரவு படி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் மக்கள் நலன்கருதி இதுபோன்று 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன் ஓரு பகுதியாக இங்கு இந்த கடற்கரை சாலை இருபுறமும் கடல்நீருடன் மரங்கள் அடங்கிய ரம்மியமான பகுதியாக உள்ளது. இந்த திட்டத்தை அக்டோபர் மாதம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தது 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சியை மேற்கொள்கிறார்.

இரண்டாயிரம் ஆண்டில் உலக இருதய தினம் கடைபிடிக்கப்பட்டு இன்று 23ம் ஆண்டு நடைபெறுகிறது. ஓவ்வொரு மனிதர்களுக்கும் நடைபயிற்சி தற்போது உள்ள சூழ்நிலையில் அவசியம் தற்போது குறைந்த வயதில் மாரடைப்பு ஏற்படுகிறது. நமது உணவு பழக்க வழக்கங்களிலும் அதை முறையாக கடைபிடிக்க வேண்டும். நோயற்ற வாழ்வு தான் நமக்கு முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில் தமிழக கிராமப்புறங்களில் 10999 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாரடைப்பு மரணத்தை தவிர்க்கும் வகையில் முதல்கட்ட சிகிச்சையாக 14வகையான மாத்திரைகள் வழங்கப்பட்டு பல உயிர்கள் காக்கப்படுகின்றன. இதுபோன்ற தொலை நோக்கு பார்வையுடன் இந்த துறை முதல்வரின் வழிகாட்டுதலோடு செயல்படுகிறது என்று பேசினார்.

அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் மக்கள் நலன் தான் முக்கியம் என்ற அடிப்படையில் செயல்படும் முதலமைச்சரின் சிறப்பான பணிகளின் மூலம் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கும் வகையில் நடைபயிற்சி அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. அதே போல் இதயம் காக்க வேண்டும். என்ற விழிப்புணர்வு பேரணியும் நடைபெறுகிறது. உணவு வகைகள் கட்டுபாடுடன் சத்தான உணவுகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். என்று பேசினார். பின்னர் பசுமையை வலியுறுத்தி மரக்கன்று நட்டினார்கள்.

நிகழ்ச்சியில் சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு பணிகள் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மருத்துவ கல்லூரி டீன் சிவகுமார், மாவட்ட மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் பத்மநாபன், துணை கண்காணிப்பாளர் குமரன், இருதய நோய் கண்காணிப்பாளர் பாலமுருகன், மருத்துவகல்லூரி துணை முதல்வர் கல்யாணி, சுகாதார பணிகள் துறை கூடுதல் இயக்குநர் பொற்செல்வன், மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும் மாநகராட்சி மண்டல தலைவருமான வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட மருத்துவ அணிதலைவர் அருண்குமார், கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், ராமகிருஷ்ணன், சரவணக்குமார், ரெக்ஸின், ஜான், விஜயகுமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, டிஎஸ்பி சத்தியராஜ், மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி, சுகாதார ஆய்வாளர்கள் ஹரிகணேஷ், ராஜசேகர், ராஜபாண்டி, மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதர நிலைய ஆய்வாளர் வில்சன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட வனத்துறை அலுவலர் மகேந்திரன், வனத்துறை சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சின்னத்துரை, மாநகர திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் ராமசந்திரன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், வட்டச்செயலாளர்கள் முத்துராஜா, கதிரேசன், பொன்ராஜ், பொன்னுச்சாமி, கங்காராஜேஷ், சுரேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் மீனாட்சி சுந்தரம், ஜெயசிங், வட்டப்பிரதிநிதி ரஜினி முருகன், பாஸ்கர், மற்றும் மணி, மகேஸ்வரசிங், தகவல் தொழில்நுட்ப அணி சுரேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இதயம் காப்போம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியை அமைச்சர்கள் கீதாஜீவன், சுப்பிரமணியன், தலைமையில் மருத்துவர்கள் செவிலியர்கள் எடுத்துக்கொண்டனர். விழிப்புணர்வு பேரணி முக்கிய சாலைகள் வழியாக மருத்துவகல்லூரி மருத்துவமணையை சென்றடைந்தது.

Previous Post

மக்கள் களம்’ மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி! விவசாய நிலங்களுக்கு விலையில்லாமல் மண் எடுப்பதற்கு அனுமதி: கனிமொழி கருணாநிதி எம்.பிக்கு விவசாயிகள் நன்றி!*

Next Post

கலைஞர் நூற்றாண்டு விழா ஒரு கோடி பனை விதை நடும் விழாவுக்கு தலைமையேற்க கூடுதல் ஆட்சியருக்கு அழைப்பு .

Next Post
கலைஞர் நூற்றாண்டு விழா ஒரு கோடி பனை விதை நடும் விழாவுக்கு தலைமையேற்க கூடுதல் ஆட்சியருக்கு அழைப்பு .

கலைஞர் நூற்றாண்டு விழா ஒரு கோடி பனை விதை நடும் விழாவுக்கு தலைமையேற்க கூடுதல் ஆட்சியருக்கு அழைப்பு .

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In