நாகப்பட்டினம் ஏப்ரல் 27
நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் மகளிர் திட்டம் சார்பில் சர்வதேச சிறுதானிய ஆண்டு-2023-24-ஐ முன்னிட்டு மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ம.பிரதிவிராஜ் உடன் உள்ளார். நம் மாவட்டத்தில் சர்வதேச சிறுதானிய ஆண்டு-2023-24-ஐ முன்னிட்டு மகளிர் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து உணவு திருவிழா மாவட்ட அளவில் நடைபெற்றது. இதில் ஏற்கனவே வட்டார அளவில் ஊட்டச்சத்து உணவு போட்டி நடத்தப்பட்டு அப்போட்டியில் முதல் இரண்டு இடம் பிடித்த மகளிர் சுய உதவிக் குழுவினர் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று பல்வேறு விதமான சத்தான உணவு பொருட்களை காட்சிப்படுத்தி விளக்கம் அளித்து சுவையாகவும், சுகாதாரமாகவும் சமைத்து காட்சிப்படுத்தினர்.மாவட்ட அளவிலான இப்போட்டியில் சுய உதவிக் குழுக்கள் காட்சிபடுத்தியிருந்த உணவு பொருட்களை மதிப்பீடு செய்ய நடுவர்களாக மாவட்ட சமுக நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டு மதிப்பீடு செய்தார்கள்.
அதனை தொடர்ந்து இவ்விழாவில் மகளிர் திட்டம் மூலம் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் மணிமேகலை விருது சிறந்த மக்கள் அமைப்புகளான வறுமை ஓழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதியளவிலான கூட்டமைப்பு நகர்புறம் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு விருதுகளையும், நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பல்வேறு சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு பெண்கள் முன்னேற்றம் குறித்த கவிதை போட்டி, கட்டுரை போட்டி மற்றும் பாட்டு போட்டியில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மகளிருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்சியில் மகளிர் திட்ட, திட்ட இயக்குநர் சு. முருகேசன், உதவி திட்ட அலுவலர் ச. சீனிவாசன், உதவி திட்ட அலுவலர் நகர்புறம் எஸ். சரவணன் மகளிர் திட்ட பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

